சினிமா செய்திகள்

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இசை விருந்து கொடுத்த யுவன் சங்கர் ராஜா: ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து + "||" + Raja yuvan YaaNabi My Islamic Indie song featuring Rizwan

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இசை விருந்து கொடுத்த யுவன் சங்கர் ராஜா: ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து

ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு இசை விருந்து கொடுத்த யுவன் சங்கர் ராஜா: ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை விருந்து கொடுத்து அசத்தி உள்ளார். அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
சென்னை,

இஸ்லாமியர்களின் புனித மாதமாகக் கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் ரமலான் பிறை தெரிந்த பின்பு நோன்பு தொடங்குவது வழக்கம். ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த நோன்பின் முடிவில், ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

ஆனால் இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவி அமலில் இருப்பதால் இஸ்லாமியர்கள் மசூதிகளில் கூடவில்லை. அரசின் அறிவுறுத்தலை ஏற்று, வீடுகளிலேயே  தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, நபிகளின் பெருமைகளை கூறும் வகையில் பாடல் ஒன்றை இசையமைத்து உருவாக்கி இருக்கிறார். யா ரசூலே.. யா ஹபீபே.. என அந்த பாடல் தொடங்குகிறது. 

இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் ரிஸ்வான் பாடி உள்ளனர். இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

 பாடலை கேட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி டுவீட் செய்துள்ளனர். நடிகர் ஆர்யா பாடல் நன்றாக உள்ளது என சைகை செய்திருக்கிறார். இதேபோல் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், பதிவிட்டுள்ள தனது டுவிட்டில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய "யா நபி" (Sal) புகழ்மாலையை கேட்டு மகிழுங்கள். பாடலை இயற்றி உடன் பாடியிருப்பவர் ரிஸ்வான் என பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய பாடலை பாராட்டியவர்களின் பாடலை ரீடிவிட் செய்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.