சினிமா செய்திகள்

விரைவில் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் + "||" + We will give you updates on the master movie soon Lokesh Kanakaraj

விரைவில் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

விரைவில் மாஸ்டர் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் -  இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
விரைவில் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம் என மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக வருகிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்து உள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, நாசர், அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் நடித்து உள்ளார்கள். இப்படம் இந்த மாதம் 9ம் தேதி வெளியாக வேண்டியது. கொரானோ ஊரடங்கு காரணமாக எப்போது வெளியாகும் எனத் தெரியவில்லை.  கொரோனாவால் தமிழகத்தில் உள்ள திரையங்குகள் செயல்படுவதற்கான கட்டுப்பாடுகள் தளர்ந்து முழுமையாக செயல்பாட்டிற்கு வர 2 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என்று விஜய் ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

இந்தநிலையில், படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,

மாஸ்டர் ஒரு ஆக்ஷன் என்டர்டெயின்மென்ட் படம். விஜய், விஜய் சேதுபதி இருவரின் ஆக்ஷனும் மிக அதிகமாக இருக்கும். தற்போது நிலைமை எதுவும் சரியில்லை. படத்தின் டிரைலர் பற்றியோ, வெளியீட்டுத் தேதி பற்றியோ சொல்ல இது சரியான நேரமில்லை. அதனால் தான் நாங்கள் எந்தவிதமான அப்டேட்டையும் கொடுக்காமல் இருக்கிறோம். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக உள்ளது. விரைவில் படம் பற்றிய அப்டேட்களைத் தருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
View this post on Instagram

Today @ 6 guys!

A post shared by Lokesh Kanagaraj (@lokeshkanagaraj.dir) on