சினிமா செய்திகள்

தியேட்டர்களுக்கு பதிலாக திரிஷா, சந்தானம் படங்கள் இணையதளத்தில் ரிலீஸ்? + "||" + Trisha, Santhanam Pictures Website Release?

தியேட்டர்களுக்கு பதிலாக திரிஷா, சந்தானம் படங்கள் இணையதளத்தில் ரிலீஸ்?

தியேட்டர்களுக்கு பதிலாக திரிஷா, சந்தானம் படங்கள் இணையதளத்தில் ரிலீஸ்?
கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது.
சென்னை,

கொரோனாவால் பட உலகம் முடங்கி உள்ளது. இந்த பிரச்சினை ஓய்ந்து திரையரங்குகளை மீண்டும் திறக்க சில மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. அதன்பிறகும் திரையரங்குகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க ஒரு இருக்கையை காலியாக விட்டு பாதி டிக்கெட்டுகள் மட்டுமே விற்க ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுபட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை இணையதளத்தில் ரிலீஸ் செய்யும் முடிவுக்கு மாறி வருகிறார்கள். ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் இணையதளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். இதுபோல் மேலும் 5 படங்கள் இணையதளத்தில் வர இருக்கின்றன. இந்த நிலையில் திரிஷா நடித்துள்ள ‘பரமபதம் விளையாட்டு’ படத்தையும் டிஜிட்டல் தளத்தில் வெளியிட படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை திருஞானம் இயக்கி உள்ளார். இதில் திரிஷா ஒரு குழந்தைக்கு தாயாக நடித்துள்ளார். 

திகில் படமாக உருவாகி உள்ளது. இந்த படம் கடந்த வருடமே திரைக்கு வருவதாக இருந்தது. பின்னர் ஜனவரி 31-ந்தேதிக்கு தள்ளி வைத்து அப்போதும் வெளியாகவில்லை. பின்னர் பிப்ரவரி 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் தியேட்டர்கள் குறைவாக கிடைத்ததால் மீண்டும் தள்ளி வைத்தனர். இதுபோல் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படத்தை தியேட்டர்களில் வெளியிட யாரும் உதவவில்லை என்றும், எனவே இதனை டிஜிட்டலில் வெளியிடலாமா? என்றும் படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி கேள்வி எழுப்பி உள்ளார்.