ஒரு கிலோ கோதுமைக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்


ஒரு கிலோ கோதுமைக்குள் ரூ.15 ஆயிரம்: நிவாரண உதவியில் அசத்திய அமீர்கான்
x
தினத்தந்தி 28 April 2020 5:12 AM GMT (Updated: 28 April 2020 9:26 AM GMT)

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு அமீர்கான் ஒரு கிலோ கோதுமைக்குள் ரூ.15 ஆயிரம் வழங்கி உள்ளார்.

சென்னை,

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டோருக்கு சல்மான்கான், ஷாருக்கான், அக்‌ஷய்குமார், கங்கனா ரணாவத், வித்யாபாலன் உளிட்ட பல இந்தி நடிகர்-நடிகைகள் உதவி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் அமீர்கான் நூதனமான முறையில் உதவி வழங்கி இருக்கிறார். ஏழைகளுக்கு தலா ஒரு கிலோ கோதுமை பாக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதனை பலரும் குறைவாக மதிப்பிட்டு வாங்க செல்லவில்லை. ஆனால் அதற்கும் வழியில்லாத பரம ஏழைகள் கோதுமை பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர். வீட்டுக்கு சென்று குழந்தைகளுக்கு சப்பாத்தி போடுவதற்காக பொட்டலத்தை திறந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. கோதுமை பாக்கெட்டுக்கு உள்ளே ரூ.15 ஆயிரம் இருந்ததை பார்த்து சந்தோஷப்பட்டனர். ஒரு கிலோ கோதுமை பாக்கெட் என்றால் உண்மையான ஏழைகள் மட்டுமே வாங்க வருவார்கள் என்று முடிவு செய்து நூதன முறையில் உதவி செய்து இருப்பதாக பலரும் அவரை பாராட்டினர்.

கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் இருந்த விஷயம் அந்த பாக்கெட்டை வினியோகம் செய்த அவரது உதவியாளர்களுக்கு கூட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story