சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ்ஷுன் நடிப்பு எப்படி - ஜேம்ஸ் காஸ்மோ பதில் + "||" + Dhanush always comes with his game face on: James Cosmo

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ்ஷுன் நடிப்பு எப்படி - ஜேம்ஸ் காஸ்மோ பதில்

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ்ஷுன் நடிப்பு எப்படி - ஜேம்ஸ் காஸ்மோ பதில்
தனுஷ் தினந்தோறும் படப்பிடிப்புக்கு வரும் போது விளையாட்டு தனமான முக பாவனைகளுடன் படப்பிடிப்புக்கு வருவார் என அப்படத்தின் வில்லனாக நடிக்கும் ஜேம்ஸ் காஸ்மோ கூறியுள்ளார்.
சென்னை,

ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடிகர் தனுஷ்ஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இருக்கிறார். தனுஷ்ஷுடன் நடித்த அனுபவம் பற்றியும் படத்தில் தான் எப்படி ஒப்பந்தமானேன் என்பதை பற்றியும் கூறி இருக்கிறார்.

நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர் ஆவார். இவர் பிரேவ் ஹார்ட், ட்ராய், தி கிரானிகல்ஸ் ஆப் நார்நியா மற்றும் சமீபத்தில் உலக புகழ் பெற்ற கேம் ஆப் த்ரோன்ஸ் என்கிற நாடகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சொந்த ஊராக கொண்ட நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, தற்போது லாக்டவுன் நேரத்தில் வீட்டிலே உடற்பயிற்சி மற்றும் சில பொழுதுபோக்குகள் மூலம் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தில் நடிகர் தனுஷ் மற்றும் அந்த படத்தில் நடித்தது குறித்து கூறியுள்ளார்.

இதை பற்றி ஜேம்ஸ் காஸ்மோ கூறுகையில். தான் இந்த படத்தில் ஒரு லண்டன் கேங்ஸ்டராக நடித்திருப்பதாகவும். மேலும் படப்பிடிப்பின் போது கார்த்திக் சுப்புராஜிடம் எனக்கு படத்தில் மற்ற இந்திய படங்களை போல ஆடல் காட்சியெல்லாம் இருக்கிறதா என்று கேட்டுள்ளாராம், ஆனால் இயக்குநரோ இந்த படத்தில் அது போல் இல்லை என்று மறுத்துவிட்டாராம்.

ஆனாலும் படப்பிடிப்பின் போது ஒரு சண்டை காட்சி முடிந்ததும் தானும் தனுஷ்ஷும் ஆடியதாக குறிப்பிட்டு இருக்கிறார்.அதனை தொடர்ந்து இந்த படத்தில் நடிகர் தனுஷ் பற்றி கூறிய நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ,

தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்றும் அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். மேலும் தனுஷ் தினந்தோறும் படப்பிடிப்புக்கு வரும் போது விளையாட்டு தனமான முக பாவனைகளுடன் படப்பிடிப்புக்கு வருவார் இது அவர் பல படங்களில் நடித்த அனுபவமாகக் கூட இருக்கலாம் என கூறினார்.

லாக்டவுன் முடிந்ததும் ஜகமே தந்திரம் பற்றிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.