சினிமா செய்திகள்

மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் 2 கோடி நிதி உதவி + "||" + COVID-19: Mumbai Police thanks Akshay Kumar for Rs 2 crore contribution

மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் 2 கோடி நிதி உதவி

மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் 2 கோடி நிதி உதவி
மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு நடிகர் அக்‌ஷய்குமார் 2 கோடி நிதி உதவி வழங்கி உள்ளார்.
மும்பை,

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவை உலுக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பித்து உள்ளனர். இதனால் தினக்கூலி தொழிலாளர்கள் வருமானம் இழந்துள்ளனர். பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய-மாநில அரசுகள் நிவாரண நிதி திரட்டி வருகின்றன. அனைத்து மொழி நடிகர்-நடிகைகளும் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்கனவே பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 கோடி வழங்கினார். இதற்காக சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டினர். தற்போது மும்பை மாநகராட்சிக்கும் ரூ.3 கோடி வழங்கி இருக்கிறார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள், முக கவசங்கள், கொரோனா பரிசோதனை கருவிகள் போன்றவற்றை தயார் செய்வதற்காக இந்த தொகையை அவர் வழங்கினார்.  தற்போது மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்காக 2 கோடி நிவாரணத் தொகை அளித்துள்ளார். 

அதற்காக அக்‌ஷய்குமாருக்கு மும்பை கமிஷனர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். 

மும்பை போலீஸ் ஹெட்கான்ஸ்டபிள் சந்திரகாந்த் பென்டுர்கர், சந்தீப் சர்வே ஆகியோருக்கு எனது சல்யூட். கொரானோ போராட்டத்தில் அவர்களது உயிரைக் கொடுத்துள்ளார்கள். நான் எனது பணியைச் செய்துள்ளேன், நீங்களும் உங்கள் பணியைச் செய்கிறீர்கள். நாம் அனைவரும் உயிருடனும், பாதுகாப்பாகவும் இருக்கிறோம் என்றால் அதற்கு அவர்களும் ஒரு காரணம் என்பதை மறக்கக் கூடாது," என அதற்கு அக்‌ஷய்குமார் பதிலளித்துள்ளார்.