சினிமா செய்திகள்

லாக் டவுனில் பள்ளி தோழிகளுடன் நினைவுகளை பகிர்ந்த நடிகை தீபிகா படுகோனே + "||" + Corona Lockdown And Bollywood: Deepika Padukone's Video Call With Besties Sets Friendship Goals

லாக் டவுனில் பள்ளி தோழிகளுடன் நினைவுகளை பகிர்ந்த நடிகை தீபிகா படுகோனே

லாக் டவுனில் பள்ளி தோழிகளுடன் நினைவுகளை பகிர்ந்த நடிகை தீபிகா படுகோனே
லாக் டவுனில் பள்ளி தோழிகளுடன் நினைவுகளை நடிகை தீபிகா படுகோனே பகிர்ந்து கொண்டார்.
மும்பை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 3-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஷாப்பிங் மால்கள், ஜிம்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுடன், தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்தான நிலையில், பிரபலங்கள் தங்களின் நேரத்தைச் சமைப்பது, உடற்பயிற்சி செய்வது, பாடுவது, ஆடுவது என தங்களுக்கு பிடித்த செயல்களை செய்வதன் மூலம் உபயோகமாகச் செலவழிக்கிறார்கள். அதனை தங்களது சமூக வலைதள பக்கத்திலும் பதிவேற்றம் செய்து தனது ரசிகர்களுடன் தொடர்பிலேயே இருந்து வருகின்றனர்.

இந்தநிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது பள்ளி தோழிகளுடன் வீடியோ கால் பேசும் ஸ்க்ரீன் ஷாட்டை இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தீபிகா படுகோனே நடிகர் ஷாருக்கானின் ஓம் ஷாந்தி ஓம் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார். பாலிவுட்டில் ஹீரோக்களுக்கு போட்டியாக டஃப் கொடுத்து வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டு இருக்கிறார் தீபிகா படுகோனே.

இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, இந்த லாக்டவுனில் தனது பள்ளி தோழிகளான திவ்யா நாராயண் மற்றும் சினேகா ராமசந்தர் ஆகிய இரு பெண்களுடன் வீடியோ காலில் பேசி தாங்கள் அரட்டை அடித்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். என்றுமே இவர்கள் தான் தனது பெஸ்டீஸ் என்றும் தீபிகா குறிப்பிட்டுள்ளார். தீபிகா ஷேர் செய்த அந்த புகைப்படம் 1 மில்லியன் ரசிகர்களை கடந்து வைரலாகி வருகிறது.
View this post on Instagram

❤️ #forever @divya_narayan4 @sneha_ramachander

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on


தொடர்புடைய செய்திகள்

1. போதைப்பொருள் வழக்கு; நடிகை தீபிகா படுகோனேவிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு நடிகை தீபிகா படுகோனே ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடைபெற்றது.
2. நடிகை தீபிகா படுகோனே போதைப்பொருள் வழக்கில் சிக்குவாரா? - போலீசார் சம்மன் அனுப்ப முடிவு
நடிகை தீபிகா படுகோனேக்கு தேவைப்பட்டால் சம்மன் அனுப்பப்படும் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...