காவல்துறைக்கு ஆதரவளிப்போம் நமக்கு உதவி செய்கிறார்கள் - நடிகர் வடிவேலு


காவல்துறைக்கு ஆதரவளிப்போம் நமக்கு உதவி செய்கிறார்கள்  - நடிகர் வடிவேலு
x
தினத்தந்தி 28 April 2020 10:53 AM GMT (Updated: 28 April 2020 2:47 PM GMT)

காவல்துறைக்கு ஆதரவளிப்போம் நமக்கு உதவி செய்கிறார்கள் என நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.

சென்னை,

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள், பிரபலங்கள் என அனைவரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் வடிவேலு  பேசியதாவது:-

என்னவோ நடந்துகொண்டிருக்கிறது. கடவுள் எல்லாரையும் சோதிக்கிறார். இந்த சோதனையில் எல்லாரும் பாஸ் ஆகனும். இந்த சோதனையில் மனித இனம் எல்லாரும் ஒன்று சேர வேண்டும்.

போலீஸ் யாரையும் வேண்டுமென்றே அடிப்பதில்லை. சரியான காரணத்தை சொன்னால் வெளியே விடுகிறார்கள். ‘உங்களை காப்பாற்ற நாங்கள் எல்லாம் சாலையில் உயிரை பணயம் வைத்து நிற்கிறோம் என்று நமக்கு உதவி செய்கிறார்கள்.

முன்பெல்லாம் கலவரம் நடந்தால் தான் தடியடி நடத்துவார்கள். ஆனால் இப்போது உயிரை காப்பாற்ற தடியடி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கையுடன் இருங்கள். பார்த்துங்கோ கடவுளை கும்பிடுங்க..

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story