சினிமா செய்திகள்

இளம் ஹீரோக்கள் நடிக்க மறுப்பு நான் காலாவதி ஆன டைரக்டரா? பிரியதர்ஷன் ஆவேசம் + "||" + Refusing to play young heroes Am I an outdated director? Priyadarshan rage

இளம் ஹீரோக்கள் நடிக்க மறுப்பு நான் காலாவதி ஆன டைரக்டரா? பிரியதர்ஷன் ஆவேசம்

இளம் ஹீரோக்கள் நடிக்க மறுப்பு நான் காலாவதி ஆன டைரக்டரா? பிரியதர்ஷன் ஆவேசம்
இளம் ஹீரோக்கள் நடிக்க மறுப்பு நான் காலாவதி ஆன டைரக்டரா? என பிரியதர்ஷன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை,

தமிழில் சின்னமணிக்குயிலே, கோபுர வாசலிலே, லேசா லேசா, காஞ்சீவரம், சிநேகிதியே, நிமிர் ஆகிய படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு மொழிகளில் 95 படங்களை டைரக்டு செய்துள்ளார். தற்போது மலையாளத்தில் மோகன்லால், பிரபு, அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ள ‘மரக்கார் அரபிக்கடலின்றே சிம்கம்’ படத்தை இயக்கி உள்ளார். 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயரின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. இந்த படத்தை தமிழிலும் வெளியிட உள்ளனர். அடுத்து இந்தியில் ‘ஹங்கம்மா 2’ படத்தை பிரியதர்ஷன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிக்க இளம் கதாநாயகர்கள் கார்த்திக் ஆர்யன், அயுஷ்மன் குரானா, சித்தார்த் மல்கோத்ரா ஆகியோரை பிரியதர்ஷன் அணுகியதாகவும், அவர்கள் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பிரியதர்ஷன் கூறும்போது, “இந்த படத்தில் நடிக்க இளம் கதாநாயகர்கள் ஆர்வம் காட்டவில்லை. என்னை காலாவதியான இயக்குனர் என்று அவர்கள் நினைத்து இருக்கலாம். காரணம் 5 வருடங்களாக நான் இந்தி படங்கள் இயக்கவில்லை. அதனால்தான் மீஸான் ஜாப்ரியை நடிக்க வைத்துள்ளேன்” என்று ஆவேசமாக கூறினார்.