சினிமா செய்திகள்

நல்ல எண்ணங்களை விதைத்து இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள் சூர்யா அறிக்கை: “சிறப்பு” என விஜய் சேதுபதி டுவீட் + "||" + Surya Report Vijay Sethupathi tweeted as “special”

நல்ல எண்ணங்களை விதைத்து இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள் சூர்யா அறிக்கை: “சிறப்பு” என விஜய் சேதுபதி டுவீட்

நல்ல எண்ணங்களை விதைத்து இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள் சூர்யா அறிக்கை: “சிறப்பு” என விஜய் சேதுபதி டுவீட்
நடிகர் சூர்யாவின் அறிக்கைக்கு நடிகர் விஜய் சேதுபதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை,

கோவில்களை போலவே பள்ளிகளையும் உயர்வாக கருத வேண்டும் என்று பேசிய நடிகை ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்தநிலையில், அந்த அறிக்கையை பார்த்த நடிகர் விஜய்சேதுபதி, அதில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் ஆமோதிக்கும் வகையில் 'சிறப்பு' என பதிவிட்டுள்ளார். முன்னதாக ஜோதிகாவின் கருத்துக்கு விஜய்சேதுபதி ஆதரவு தெரிவித்ததாக வலம் வந்த ஒரு போஸ்ட்டுக்கு இது உண்மைக்கு புறம்பானது (ஃபேக்) என விஜய்சேதுபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.