சினிமா செய்திகள்

முதியவரின் செயலால் அழுது விட்டேன் - டைட்டானிக் நடிகை + "||" + Kate Winslet was Overwhelmed When Old Man in Himalayas Recognised Her as Rose from Titanic

முதியவரின் செயலால் அழுது விட்டேன் - டைட்டானிக் நடிகை

முதியவரின் செயலால் அழுது விட்டேன் - டைட்டானிக் நடிகை
முதியவரின் செயலால் நான் அழுது விட்டேன் என டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் கூறியுள்ளார்.
நியூயார்க்,

உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன, காலத்தால் அழியாத காதல் காவியம் ‘டைட்டானிக்’. ஜேக்-ரோஸ் என்ற அந்த காதல் கதாபாத்திரங்களை, இத்தனை வருடம் கழித்தும் இன்னும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். டைட்டானிக் கப்பல் மூழ்கியதற்கு கவலைப்பட்டவர்களை விட, இந்த ஜோடி பிரிந்ததற்கு கவலைப்பட்டவர்கள் தான் அதிகம்.

தன்னுடைய இந்தியப் பயணத்தின்போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துள்ள டைட்டானிக் நடிகை கேட் வின்ஸ்லெட் கூறியதாவது:-

டைட்டானிக் படம் வெளிவந்து சில ஆண்டுகள் கழித்து நான் இந்தியாவின் இமயமலைப் பகுதியில்  பைகளை மாட்டிக்கொண்டு நடந்து கொண்டிருந்தேன். அப்போது 85 வயது மதிக்கத்தக்க முதியவர் கைத்தடியை ஊன்றி கொண்டே என்னிடம் வந்தார். என்னைப் பார்த்த அவர் நீ டைட்டானிக் நடிகை ரோஸ் என என்று கூறினார். நான் ஆமாம் என்று தலையாட்டினேன். உடனே அவர் எனது கைகளை அவரது இதயப் பகுதியில் வைத்துக்கொண்டு நன்றி எனச் சொன்னார். நான் உணர்ச்சிப் பெருக்கில் அழுது விட்டேன். அந்த படம் ரோஸ் என கேரக்டர் இத்தனை பேருக்கு எவ்வளவு பாதிப்பை கொடுத்தது என்பதைப் புரிந்துகொள்ள இது உண்மையில் உதவியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும்  ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய திரைப்படத்தைப் பற்றி பெருமைப்படுவதாகவும், ஆனால் "மிகப்பெரிய வெற்றி" தன்னை சங்கடப்படுத்தியது என கூறினார்.