சினிமா செய்திகள்

இர்பான்கான் மறைவு: நல்ல மனிதரை இழந்து விட்டோம் - நடிகர் தனுஷ் இரங்கல் + "||" + what a great talent and a wonderful human being we have lost Dhanush

இர்பான்கான் மறைவு: நல்ல மனிதரை இழந்து விட்டோம் - நடிகர் தனுஷ் இரங்கல்

இர்பான்கான் மறைவு: நல்ல மனிதரை இழந்து விட்டோம் - நடிகர் தனுஷ் இரங்கல்
இர்பான்கான் மறைவிற்கு நடிகர் தனுஷ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,

பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்பான்கான் மும்பையில் உள்ள கோகிலா பென் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் நேற்று அனுமதிக்கப்பட்டார். பெருங்குடல் தொற்று காரணமாக ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நடிகர் இர்பான் கான் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

பாலிவுட் நடிகர் இர்பான்கான் மறைவு செய்தியைக் கேட்டு என் மனம் உடைந்தது. அவர் திறமையான கலைஞர். நல்ல ஒரு அற்புதமான மனிதரை இழந்து விட்டோம். எப்பொழுதும் அவரது கனிவான வார்த்தைகளை நியாபகம் வைத்திருப்பேன். ஒரு சிறந்த இடம் இருக்கிறது, அவர் அங்கே இருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல். அவரது ஆன்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.