சினிமா செய்திகள்

நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து போஸ் கொடுத்த நடிகை பிரவீணா + "||" + Actress Praveena with pose in hand snake

நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து போஸ் கொடுத்த நடிகை பிரவீணா

நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து போஸ் கொடுத்த நடிகை பிரவீணா
நல்லபாம்பு குட்டியை கையில் வைத்து நடிகை பிரவீணா சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
திருவனந்தபுரம்,

தமிழில், சசிகுமார் நடித்த வெற்றிவேல், கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமின் சாமி 2, கோமாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர், மலையாள நடிகை பிரவீணா. மலையாளத்தில் இங்கிலீஸ் மீடியம், ஹஸ்பன்ட்ஸ் இன் கோவா, கவுரி, அக்னி சாட்சி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் மகராசி என்ற தொடரிலும் நடித்து வருகிறார். 

இவர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் இவரது வீட்டு கோழிக்கூட்டில் நல்ல பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள பாம்பு பண்ணைக்குத் தகவல் தெரிவித்தார். அங்குள்ள ஊழியர்கள் விரைந்து வந்து கோழி கூட்டிலும் அதன் சுற்றுப்புறங்களில் பாம்பைத் தேடினர். ஆனால், அது கிடைக்கவில்லை.  ஆனால், கோழி கூட்டுக்குள் பிறந்து சில நாட்களான நல்லபாம்பு குட்டி ஒன்று இருந்ததை கண்டனர். 

இதைப் பாம்பு பண்ணை ஊழியர்கள் லாவமாக பிடித்தனர். குட்டியாக இருந்தாலும் அது படமெடுத்து ஆடியபடி இருந்தது. இதனால் பிரவீணா உட்பட அவர் வீட்டில் இருந்தவர்கள் பயந்தனர்.  ஆனால், ஊழியர்கள் குட்டி பாம்பை கண்டு அஞ்ச வேண்டாம் என்று நம்பிக்கைக் கொடுத்தனர். பின்னர் அந்த குட்டிப் பாம்பை, பிரவீணா கையில் கொடுத்தனர்.

அதை இரண்டு கைகளிலும் தைரியத்துடன் பெற்றுக்கொண்ட பிரவீணா லேசாக பயந்தார்.  அந்தப் பாம்பு கையில் இருந்தபடி  படமெடுத்து ஆடியது இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில்  பிரவீணா பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து  பிரவீணா கூறுகையில், பாம்பைக் கண்டால் கொல்ல வேண்டும் என்கிற அணுகுமுறை மாற வேண்டும் என்றார்.