சினிமா செய்திகள்

அனிரூத் நடத்தும் "ஒன் நேசன்" இசை நிகழ்ச்சி + "||" + Anirudh's "One Nation" concert

அனிரூத் நடத்தும் "ஒன் நேசன்" இசை நிகழ்ச்சி

அனிரூத் நடத்தும் "ஒன் நேசன்" இசை நிகழ்ச்சி
இசையமைப்பாளர் அனிரூத் யூடியூப்பில் நேரலையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.
சென்னை, 

இசையமைப்பாளர் அனிரூத் யூடியூப்பில் நேரலையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை பற்றிய அறிவிப்பை தனது அறிவிப்பை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது கொரோனா சமயத்தில் மக்களை மனதைரியத்துடன் வைத்து கொள்ள பல பிரபலங்களும் முயற்சி செய்து வருகின்றனர். பலரும் தங்களின் சமூக வலைத்தளங்களின் வாயிலாக பல்வேறு தகவல்களை மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். இதன் வாயிலாக மக்களை வீட்டில் இருந்த படியே உற்சாக படுத்த இசையமைப்பாளர் அனிரூத்தும் களம் இறங்கியுள்ளார்.

யூடியூப்பில் நேரலையில் வந்து இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார்.  இந்த நிகழ்ச்சிக்கு "ஒன் நேசன்" என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது. இந்த நேரலையில் இந்தியாவின் பிரபலமான யூடியூப்பர்கள் மற்றும் பல முக்கிய கலைஞர்களும் கலந்து கொள்ள உள்ளதாக அனிரூத் கூறி உள்ளார்.

மேலும் இந்த நேரலை இசை நிகழ்ச்சியின் மூலம் வசூலாகும் பணத்தை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு அளிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.