கொரோனா ஊரடங்கினால் மொட்டை மாடியில் நடந்த நடிகர் திருமணம்


கொரோனா ஊரடங்கினால் மொட்டை மாடியில் நடந்த நடிகர் திருமணம்
x
தினத்தந்தி 1 May 2020 10:10 AM IST (Updated: 1 May 2020 10:10 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கினால்நடிகர் மணிகண்டன் திருமணம் மொட்டை மாடியில் நடந்தது.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால், பிரபலங்கள் பலர் ஏற்கனவே நிச்சயித்த ஆடம்பர திருமண விழாக்களை ரத்து செய்து விட்டு, அதே நாளில் எளிமையாக தங்கள் திருமணத்தை நடத்தி வருகிறார்கள். தமிழில் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் மணிகண்டன், கோவிலில் நெருங்கிய சில உறவினர்களை வைத்து தனது திருமணத்தை நடத்தினார். ‘கோலி சோடா-2’ படத்தில் நடித்துள்ள மலையாள முன்னணி நடிகர் செம்பன் வினோத், தனது 2-வது திருமணத்தை எளிமையாக நடத்தினார். இந்த நிலையில் பிரபல இந்தி நடிகர் அஷுதோஷ் கவுசிக்கும், தனது திருமணத்தை வீட்டு மொட்டை மாடியில் நடத்தி உள்ளார். இவர் லால் ரங்க், ஜில்லா காஸியாபாத், படாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வெற்றிகரமாக ஓடிய திருட்டுப் பயலே படத்தின் இந்தி ரீமேக்கான ஷார்ட் கட் ரோமியோ படத்திலும் நடித்துள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.

அஷுதோஷ் கவுசிக்கும், அர்பிதா என்பவரும் காதலித்து வந்தனர். திருமணமும் முடிவானது. கொரோனா ஊரடங்கில் திருமணத்தை தள்ளி வைக்க விரும்பாமல் நிச்சயித்த தேதியிலேயே நொய்டாவில் உள்ள தனது வீட்டு மொட்டை மாடியில் நெருங்கிய உறவினர்கள் சிலரை மட்டும் வைத்துக்கொண்டு மணமகளுக்கு தாலி கட்டினார்.

Next Story