கொரோனா நிதி திரட்ட ஜேம்ஸ் பாண்ட் பட ‘கிளாப் போர்டு’ ஏலம்


கொரோனா நிதி திரட்ட ஜேம்ஸ் பாண்ட் பட ‘கிளாப் போர்டு’ ஏலம்
x
தினத்தந்தி 1 May 2020 10:13 AM IST (Updated: 1 May 2020 10:13 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் வருமானம் இன்றி லட்சக்கணக்கான மக்கள் கஷ்டப்படுகின்றனர்.

சென்னை,

கொரோனா வைரஸ் உலகையே அலற வைத்து வருகிறது. இந்த நோய்க்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகிறார்கள். இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறுகின்றன. கொரோனாவால் வருமானம் இன்றி லட்சக்கணக்கான மக்கள் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு உதவ அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் நிதி திரட்டி வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிதி திரட்டுவதற்காக, ஜேம்ஸ் பாண்ட் படக்குழுவினர் நூதனமான முறையில் ‘நோ டைம் டு டை’ படப்பிடிப்பில் பயன்படுத்திய கிளாப் போர்டை ஏலத்தில் விட்டுள்ளனர். அந்த கிளாப் போர்டில் ‘நோ டைம் டு டை’ படத்தில் பணியாற்றிய நவோமி ஹாரிஸ், லியா சீயூடாக்ஸ், லஸானா லின்ச் மற்றும் படத்தின் இயக்குனர் கேரி போஜி, தீம் பாடலை பாடிய பில்லி எல்லீஸ் ஆகியோரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.

இந்த கிளாப் போர்டு ஏலத்தில் கிடைக்கும் தொகை இங்கிலாந்து சுகாதார துறைக்கு வழங்கப்படும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். ‘நோ டைம் டு டை’, 25-வது ஜேம்ஸ் பாண்ட் படமாக தயாராகி உள்ளது. முந்தைய 4 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்த டேனியல் கிரேக் இந்த படத்திலும் ஜேம்ஸ் பாண்ட் ஆக நடித்துள்ளார். படத்தின் ரிலீசை கொரோனா காரணமாக நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Next Story