எனக்கு நீங்கள் தான் மிகப்பெரிய உந்துதல் லவ் யூ தல - நடிகர் பிரசன்னா


எனக்கு நீங்கள் தான் மிகப்பெரிய உந்துதல் லவ் யூ தல - நடிகர் பிரசன்னா
x
தினத்தந்தி 1 May 2020 1:44 PM IST (Updated: 1 May 2020 1:44 PM IST)
t-max-icont-min-icon

எனக்கு நீங்கள் தான் மிகப்பெரிய உந்துதல் லவ் யூ தல என நடிகர் பிரசன்னா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் அஜித் இன்று தனது 49-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஒவ்வொரு வருடமும் அஜித்தின் பிறந்தநாளின் போது அதை திருவிழாவை போல அவரது ரசிகர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் இந்த வருடம் உலகமே கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், தான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, என முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அஜித்குமார்.

இருப்பினும் அவரது ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே, இணையத்தில் அஜித் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர் எனலாம்.  இந்தநிலையில்,  நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பிறந்தநாள் வாழ்த்துகள் என் அன்பான தல. என்னைப் போன்ற லட்சியவாதிக்கு, திரைப்பட பின்னணி இல்லாத ஒருவரால் போராடி, இந்தத் துறையில் ஜெயிக்க முடியும் என்பதற்கு நீங்கள்தான் மிகப்பெரிய உந்துதல். லவ் யூ தல என பதிவிட்டுள்ளார்.

Next Story