ஊரடங்கில் ருசியாக சமைக்க கற்றேன் - நடிகை ராஷி கன்னா


ஊரடங்கில் ருசியாக சமைக்க கற்றேன் - நடிகை ராஷி கன்னா
x
தினத்தந்தி 2 May 2020 10:20 AM IST (Updated: 2 May 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கில் ருசியாக சமைக்க கற்றுக்கொண்டதாக நடிகை ராஷி கன்னா தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்துள்ள ராஷி கன்னா, தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். கொரோனா ஊரடங்கில் சமையல் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ராஷி கன்னா கூறியதாவது:-

கொரோனா ஊரடங்கினால் ஓய்வு நேரத்தில் நிறைய கற்றுக்கொண்டேன். என்ன கற்றேன் என்பதை சினிமாவில் காட்டப்போகிறேன். எங்கள் வீட்டில் இருப்பவர்கள் ஒரு விஷயத்தில் மட்டும் சந்தோஷப்பட்டனர். எனக்கு சமையல் தெரியாது. பழக்கமும் இல்லை. எனது அம்மா நீ எப்போது சமைக்க கற்றுக்கொள்ள போகிறாய் என்று அடிக்கடி கேட்பார். படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்ததால் அதை கற்க முடியவில்லை.

ஆனால் கொரோனா ஊரடங்கில் எனது அம்மா விடவில்லை. சமையல் அறைக்குள் அழைத்தார். சும்மாதான் போனேன். ஆனால் இப்போது சமைப்பதில் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. விதம் விதமாக சமையல் செய்ய கற்றுக்கொண்டேன். அம்மா சந்தோஷப்பட்டார். குடும்பத்தினர் எனது கையால் செய்த உணவுகளை ருசித்து சாப்பிடுகிறார்கள். இந்த ஓய்வில் பிடித்த இன்னொரு விஷயம் வீட்டில் எல்லோரும் சேர்ந்து கலகலவென சிரித்து பேசிக்கொண்டு இருக்கிறோம். அது இந்த ஊரடங்கில் எனக்கு கிடைத்த வரம்.

இவ்வாறு ராஷி கன்னா கூறினார்.

Next Story