"உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா” நடிகை கஸ்தூரி டுவீட்


உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா” நடிகை கஸ்தூரி டுவீட்
x
தினத்தந்தி 2 May 2020 9:08 AM GMT (Updated: 2 May 2020 9:08 AM GMT)

உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா".. என கஸ்தூரி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.


சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசும், சுகாதாரத்துறையும் முழு வீச்சில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசு தொற்று இல்லாத மாநிலமாக மாற்ற போராடி வருகிறது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லாத நிலையில் பச்சை மண்டலம் என கிருஷ்ணகிரி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரியின் நல்லூர் கிராமத்தை சேர்ந்த 67 வயது நிரம்பிய முதியவர் ஒருவர் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்பியுள்ளார்.  அவருடன் 3 பேர் சென்றுள்ளனர். வந்த இடத்தில் அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவருடன் சென்ற 3 பேர் மற்றும் அவரின் உறவினர்கள் 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  ஆகவே பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியது.  அரியலூர் மாவட்டமும் ஆரஞ்சு கலரில் இருந்து ரெட் கலருக்கு மாறி உள்ளது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

 "உள்ளதும் போச்சா நொள்ளை கண்ணா.. பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரியில் ஒருவருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.. அரியலூர் மாவட்டமும் ஆரஞ்சு கலரில் இருந்து ரெட் கலருக்கு சென்றுவிட்டது.. கோயம்பேட்டில் இருந்து தொற்றை பரப்பியவர்களுக்கு நன்றி. கோயம்பேடு மார்க்கெட் இப்போது வைரஸ் மார்க்கெட் ஆகிவிட்டது என பதிவிட்டுள்ளார்.

Next Story