கடவுளோட பிளான் என்னன்னு நமக்கு தெரியாது - நடிகை அதுல்யா
கடவுளோட பிளான் என்னன்னு நமக்கு தெரியாது என நடிகை அதுல்யா போட்ட டுவீட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சென்னை,
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது மே 17ம் தேதி வரை அதனை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்தநிலையில்
மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர்.
இதனால் நடிகை, நடிகர்கள் படப்பிடிப்பு எதுவும் இன்றி வீட்டிலே உள்ளனர்.இந்த நிலையில், அவர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதனை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது நடிகை அதுல்யா ரவி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
நம்ம யாருக்கும் கடவுளின் பிளான் என்னன்னு தெரியாது. ஆனால், எப்படி இருந்தாலும் கடவுளின் பிளான் தான் இறுதியில் ஜெயிக்கும் என்பது மட்டும் உறுதி என தெரிவித்துள்ளார். நீல நிறத்தில் பூ போட்ட டாப்ஸ் அணிந்தபடி அழகாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
நடிகை அதுல்யா 'நாடோடிகள் 2' படத்தை தொடர்ந்து 'எண்ணித் துணிக' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
We may not know what god has planned , but I know his plan never fails 😍 happy Sunday sweethearts❤️ be strong and be safe 😍 #quarantinelife#beinginhome🏡 #nomakeup#love#puppies#book#home#workout#food#movies ❤️ pic.twitter.com/Beno9xZFc0
— Athulya Ravi (@AthulyaOfficial) May 3, 2020
Related Tags :
Next Story