பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை தமன்னா மணக்கிறாரா? வைரலாகும் புகைப்படம்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை தமன்னா மணக்கிறாரா? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்.
சென்னை,
தமிழில் கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை, வேங்கை, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கும் தமன்னா தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் 2 படங்களும், இந்தியில் ஒரு படமும் கைவசம் உள்ளன.
இந்த நிலையில் தமன்னாவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக இணைய தளங்களில் நேற்று திடீர் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதாரமாக இருவரும் நகைக்கடையில் நகை வாங்குவதுபோன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தனர். திருமணத்துக்காக அவர்கள் நகை வாங்கியதாகவும் பதிவிட்டனர். ஏற்கனவே சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை மணந்துள்ளார். இப்போது தமன்னாவும் பாகிஸ்தான் வீரரை மணமகனாக தேர்வு செய்துள்ளார் என்றும் கூறினர். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
விசாரித்தபோது இது வதந்தி என்று தெரிய வந்தது. தமன்னாவும், அப்துல் ரசாக்கும் ஏற்கனவே நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்று உள்ளனர். அந்த பழைய புகைப்படத்தை தற்போது இணையதளத்தில் வெளியிட்டு, இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்தி பரப்பி உள்ளனர். ஏற்கனவே அமெரிக்க டாக்டர் ஒருவரை தமன்னா மணக்க இருப்பதாகவும் தகவல் பரவியது. அதனை அவர் மறுத்து இருந்தார்.
Related Tags :
Next Story