சினிமா செய்திகள்

நடிகை மேக்னா விவாகரத்து + "||" + Actress Magna divorced

நடிகை மேக்னா விவாகரத்து

நடிகை மேக்னா விவாகரத்து
நடிகை மேக்னாவுக்கு கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைத்துள்ளது.
சென்னை,

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘கயல்’ படத்தில் நடித்தவர் மேக்னா வின்செண்ட். இந்த படத்தில் ஆனந்தி, சந்திரன் ஆகியோரும் நடித்து இருந்தனர். மேலும் தெய்வம் தந்த வீடு, பொன்மகள் வந்தாள், அவளும் நானும் ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மலையாள நடிகையான இவர் டான் டோமி என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். அதற்கு பெற்றோர்களும் சம்மதித்தனர். மேக்னாவின் சகோதரி டிம்பிள் ரோசும் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருகிறார். அவருக்கும் ஆன்சன் என்பவருக்கும் திருமணம் முடிவானது.

இதையடுத்து சகோதரிகள் மேக்னா, டிம்பிள் திருமண நிச்சயதார்த்தம் திருச்சூரில் ஒரே நாளில் நடந்தது. டிம்பிள் திருமணத்தை 2016-ம் ஆண்டும், மேக்னா திருமணத்தை 2017-ம் ஆண்டும் நடத்தினர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மேக்னாவுக்கும் கணவர் டான் டோமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்தனர். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தாக்கல் செய்தனர். தற்போது இருவருக்கும் விவாகரத்து கிடைத்துள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டாம் டோமி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.