சினிமா செய்திகள்

டாஸ்மாக்கை திறப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி - நடிகை கஸ்தூரி + "||" + Thank you to the Government of Tamil Nadu Actress Kasturi

டாஸ்மாக்கை திறப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி - நடிகை கஸ்தூரி

டாஸ்மாக்கை திறப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி - நடிகை கஸ்தூரி
டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து உள்ளது.  இவற்றில் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.  தமிழகத்தில் 3,023 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.  1,379 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.  30 பேர் பலியாகி உள்ளனர்.  சென்னையில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை தொடர இருக்கும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு ஓட்டல்கள், தனி கடைகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில், நடிகை கஸ்தூரி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 

டாஸ்மாக்கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு  நன்றி நன்றி.

நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே  எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி !  என பதிவிட்டுள்ளார்.