சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் - அமைச்சரிடம் குஷ்பு கோரிக்கை


சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் - அமைச்சரிடம் குஷ்பு கோரிக்கை
x
தினத்தந்தி 4 May 2020 4:25 PM IST (Updated: 4 May 2020 6:14 PM IST)
t-max-icont-min-icon

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும் என அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து குஷ்பு கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னை,

சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்த பின் நடிகை குஷ்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஊரடங்கால் சின்னத்திரை நிர்வாகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை தொழிலாளர்கள் அனைவரும் முடங்கி உள்ளனர். நாங்கள் அளிக்கும் நிவாரண உதவி போதுமானதாக இல்லை.

சின்னத்திரை தொழிலாளர்களுக்கு அரசு கொடுத்த நிவாரணம் போதவில்லை. ஒரு நாள் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அவர்களுக்கு நிவாரண உதவி ரூ.1000 போதாது. ஒரு மாதத்தில் 20 நாட்களுக்கு சூட்டிங் நடைபெறும். அவர்கள் தற்போது ரொம்ப கஷ்டத்தில் இருக்கிறார்கள். 

அவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தாலும் பற்றவில்லை. எங்களால் எவ்வளவு அளவிற்கு உதவி செய்ய முடியுமோ செய்துள்ளோம்.  தயாரிப்பாளர்  சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார் தனிப்பட்ட முறையில் உதவிகளை செய்துள்ளார். வேலையை தொடங்கினால்  தான் இதற்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் எங்களுக்கு. அதனால் தான் சின்னத்திரை சங்கம் சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை  சந்தித்து விட்டு எப்போது வேலையை ஆரம்பிக்க முடியும். 

வேலையை ஆரம்பித்தால் என்ன என்ன சமூக விலகல் மற்றும் ரூல்ஸ், ரெகுலேஷன், முன் அறிவிப்புகள் இருக்கும் அதனை பின் தொடரவேண்டும் என அதனை வைத்து தான் சூட்டிங் பண்ண போறோம். சூட்டிங் எப்ப பண்ண முடியும் அதற்காகத்தான் அவரிடம் கோரிக்கை வைத்தோம். அவர் முதல்-அமைச்சரிடம் கலந்து ஆலோசித்து விட்டு பதில் தருவதாக கூறி உள்ளார். நம்பிக்கையுடன் இருக்கிறோம். லாக் டவுன் காலத்தில் சூட்டிங் ஆரம்பிக்கிறதா இருந்தா ரொம்ப வசதியாக இருக்கும் எங்களுக்கு, அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story