கொரோனா நிதியாக ரூ.200 கொடுப்பவர்களுடன் ஸ்ரேயா நடனம்
கொரோனா நிதியாக ரூ.200 கொடுப்பவர்களுடன் ஸ்ரேயா நடனம் ஆட உள்ளதாக நூதன அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கும் ஏழை மக்களுக்கு உதவ பலர் உதவி கரம் நீட்டி வருகிறார்கள். தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வீதிவீதியாக சென்று உணவு பொட்டலங்கள் வழங்குகின்றனர். குடிசை பகுதி மக்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்படுகின்றன. நடிகர்-நடிகைகள் மத்திய, மாநில அரசுகளுக்கு நிவாரண நிதி வழங்கி உள்ளனர். இந்தி நடிகர்கள் பலர் ஆயிரக்கணக்கானோருக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா கொரோனா நிதி திரட்ட நூதன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
வயதானவர்கள், முதியோர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், வீடு இழந்தோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தொண்டு நிறுவனம் மூலம் கொரோனா நிதி திரட்டப்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு ஒவ்வொருவரும் ரூ.200 கொரோனா நிதியாக அனுப்புங்கள். அப்படி ரூ.200 அனுப்பியவர்கள் அது தொடர்பான ரசீதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து குறிப்பிட்ட இ-மெயிலுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பியவர்களில் இரு அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் என்னுடன் நடனம் ஆடலாம். யோகா பயிற்சிகள் செய்யலாம்.”
இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story