பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது வீட்டிலேயே மெட் காலா பேஷன் நிகழ்ச்சியை சிறுமியை வைத்து சிம்பிளாக நடத்தியுள்ளார்.
மும்பை,
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. சினிமா துறையில் தற்போது வெற்றிகரமாக வலம் வருகிறார். நடிப்பு தவிர ஆரோக்கியம், கல்வி, பெண்கள் உரிமை போன்ற சமூக விழிப்புணர்வு பிரசார பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
ஆங்கில டெலிவிஷன் தொடர்களில் நடித்து ஹாலிவுட் ஹாலிவுட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது கணவருடன் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்.
இந்தநிலையில், பேஷன் பிரியையான பிரியங்கா சோப்ரா, மெட் காலா நிகழ்ச்சிக்கும், பேஷன் உடைகளில் கலக்க தொடங்கினார். 2017ம் ஆண்டு, காக்கி கலரில் நீண்ட ஓவர் கோட் போன்ற உடையை அணிந்து நடிகை பிரியங்கா சோப்ரா மெட் காலா நிகழ்ச்சியை அலங்கரித்தார். 2017ம் ஆண்டு பிரியங்கா சோப்ரா மெட் காலாவில் கலந்து கொண்டது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. அதனை தொடர்ந்து 2018ம் ஆண்டு நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் ரெட் கலர் உடையில் நடிகை பிரியங்கா கலந்து கொண்டு தனது பேஷன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.
மெட் காலாவில் சிறந்த ஃபேஷன் உடை அணிந்து வருபவர்களுக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் குவியும். அதனை அடைய வேண்டும் என நினைத்த பிரியங்கா சோப்ரா பேய் மாதிரி போன்ற தோற்றத்தை உருவாக்கி மேக்கப் போட்டுக் கொண்டு கடந்த ஆண்டு மெட் காலா நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்தநிலையில், கொரோனா பரவல் காரணமாக மெட் காலா நிகழ்ச்சி இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால், வீட்டிலேயே தனது உறவுக்கார குட்டிப் பெண் ஸ்கை கிருஷ்ணா என்ற சிறுமி மேக்கப் போட்டு அலங்கரித்து, நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மணி மகுடத்தையும் சூட்டியுள்ளார். அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.
First Monday in May This year’s theme: Pretty Pretty Princess Glam and creative direction by: Krishi pic.twitter.com/WilkLqAWyD