சினிமா செய்திகள்

பிரபல ஹாலிவுட் இயக்குனர் தற்கொலை + "||" + Famous Hollywood Director Suicide

பிரபல ஹாலிவுட் இயக்குனர் தற்கொலை

பிரபல ஹாலிவுட் இயக்குனர் தற்கொலை
பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜான் லாபியா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
நியூயார்க்,

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜான் லாபியா. இவர் ஜெஸிகா ஹார்பர், டைலான் மேக்டேர்மோட் நடித்த தி புளூ இக்குவானா படத்தை இயக்கி உள்ளார். திகில், நகைச்சுவை படமான மேன்ஸ் பெஸ்ட் பிரண்ட் உள்ளிட்ட மேலும் சில படங்களையும் இயக்கி இருக்கிறார். டாம் ஹாலந்த் இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற சைல்ட்ஸ் பிளே படத்துக்கு இவர்தான் திரைக்கதை எழுதி இருந்தார். இந்த படத்தின் அடுத்த பாகத்தையும் இயக்கினார்.

கோஸ் ஸ்டோரிஸ், டார்க் ஹஸ்டிஸ், தி ரேட்ஸ், தி டெட் ஸோன் உட்பட சில தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறார். ஏற்கனவே விவாகரத்து செய்த தனது முன்னாள் மனைவி பேவர்லி மற்றும் 2 குழந்தைகளுடன் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்த ஜான் லாபியா திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 63.

குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு காரணமா? என்பது தெரியவில்லை. போலீசார் விசாரிக்கிறார்கள், அவரது மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.