சினிமா செய்திகள்

ஊழியர்களுக்கு முழு சம்பளம் அளித்த விஷ்ணு விஷால்! + "||" + Vishnu Vishal pays full salary to employees

ஊழியர்களுக்கு முழு சம்பளம் அளித்த விஷ்ணு விஷால்!

ஊழியர்களுக்கு முழு சம்பளம் அளித்த விஷ்ணு விஷால்!
விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களின் ஊழியர்களுக்கும், நடிகர் விஷ்ணு விஷால் முழுச் சம்பளம் வழங்கி உள்ளார்.
சென்னை,

நடிகர் விஷ்ணு விஷாலின் படத் தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மூன்று படங்களைத் தற்போது தயாரித்து வருகிறது. இந்த மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் இன்னமும் முடிவடையாத நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிப்புக்கு ஆளாகியுள்ள அப்படங்களின் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஊழியர்களுக்கான முழு சம்பளத்தையும் இப்போதே தந்து உதவியுள்ளார் விஷ்ணு விஷால்.

இதுபற்றி இயக்குநர் அருண் வைத்தியநாதன் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். மூன்று படங்களின் ஊழியர்களுக்கும் முழு சம்பளத்தையும் தந்து உதவியுள்ளார் விஷ்ணு விஷால். கொரோனா பாதிப்பால் அவருடைய படங்களின் நிலை பற்றி உறுதியாகத் தெரியாத நிலையில் அனைவரும் முழு சம்பளத்தையும் தந்துள்ளார். தர்மம் வீட்டிலிருந்து தொடங்குகிறது. விஷ்ணு விஷாலின் செயல் ஊக்கமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

விஷ்ணு விஷாலின் இந்த செயலை பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.