சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் - நடிகை சுவாதி


சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் - நடிகை சுவாதி
x
தினத்தந்தி 7 May 2020 10:20 AM IST (Updated: 7 May 2020 10:20 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைத்தளத்தில் எனது பெயரில் போலி கணக்குகள் உள்ளதாக நடிகை சுவாதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழில் ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சுவாதி. அதில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்... உன் கண்கள் இரண்டால்...’ பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து கனிமொழி, போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகறி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் கணவர் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து சுவாதி நீக்கியதால், கணவரை பிரிந்து விட்டதாக வதந்தி பரவியது. அதனை மறுத்தார்.

இந்த நிலையில் சுவாதி தனது பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் உருவாகி இருப்பதாக சாடி உள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“நான் முகநூல் மற்றும் டுவிட்டரில் இல்லை. ஆனாலும் அவற்றில் எனது பெயரில் போலி கணக்குகள் இருப்பதாக கவனத்துக்கு வந்தன. அந்த போலி கணக்குகளை யாரும் பின்தொடர வேண்டாம். டுவிட்டரில் இதுவரை நான் கணக்கு தொடங்கவில்லை. முகநூலில் இருந்து 2011-ம் ஆண்டில் வெளியேறி விட்டேன். இன்ஸ்டாகிராமில் இருக்கிறேன்”.இவ்வாறு கூறியுள்ளார்.

Next Story