பிரல நடிகை மெலிசா ரவுச்க்கு 2-வது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நியூயார்க்,
பிக் பேங் தியரி தொடரில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை மெலிசா ரவுச். அவருக்கு தற்போது இரண்டாவது ஆண் குழந்த பிறந்துள்ளது. இந்த சந்தோஷமான தகவலை அவர் இன்ஸ்டாகிராமில் பெயருடன் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார்.
எங்கள் மகனான ப்ரூக்ஸ் ரவுச்சின் பிறப்பை அறிவித்ததில் நம்பமுடியாத அளவிற்கு நன்றி மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த ஆண் குழந்தை எங்கள் குடும்பத்தில் சேர நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
சிறு வயதிலிருந்தே தன் நண்பராக இருந்தவரை திருமணம் செய்து இரண்டு வயதில் சாடி என்ற பெண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.