சினிமா செய்திகள்

டாஸ்மாக் திறப்பு :ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி + "||" + Kamal Haasan condemns the opening of the task force

டாஸ்மாக் திறப்பு :ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி

டாஸ்மாக் திறப்பு :ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா? கமல்ஹாசன் கேள்வி
டாஸ்மாக் திறந்து ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?என கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை

தமிழகத்தில் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் மதுக்கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் தாங்குமா தமிழகம் என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது.

இந்நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமல்ஹாசன் டுவிட் செய்து உள்ளார்

அவர்வெளியிட்டு உள்ள டுவிட்டில்

"மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். தற்போது டாஸ்மாக் திறந்துவிட்டு, ஊர்கூடி கட்டிக்காத்ததை காற்றில் விடுவது நியாயமா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-கமல்ஹாசன்
தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
2. கமல்ஹாசனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 66-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
3. கமல் ஹாசன் பிறந்த நாள்; வாழ்த்து தெரிவிக்க தொண்டர்கள் குவிந்தனர்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசனின் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டின் முன்பு இன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களும் தொண்டர்களும் திரண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
4. என்னுடைய குரல் சட்டசபையில் ஒலிக்கும்: ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
சட்டசபையில் தன்னுடைய குரல் ஒலிக்கும் என்றும், ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்றும் கமல்ஹாசன் கூறினார்.
5. வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்தது வரவேற்கத்தக்கது; மனுஸ்மிருதி குறித்த போராட்டம் தேவையில்லாதது -கமல்ஹாசன்
மனுஸ்மிருதி குறித்து போராட்டம் நடத்துவது தேவையில்லாதது; மனுஸ்மிருதி புழக்கத்தில் இல்லாத ஒரு புத்தகம்; நான் நாத்திக வாதி அல்ல; நான் பகுத்தறிவாளன் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.