சினிமா செய்திகள்

தனுஷின் 18 ஆண்டுகால சினிமா வாழ்வை குறிக்கும் வகையில் சிறப்பு ஹேஷ்டேக்! + "||" + A special hashtag that marks Dhanush's 18-year cinema career

தனுஷின் 18 ஆண்டுகால சினிமா வாழ்வை குறிக்கும் வகையில் சிறப்பு ஹேஷ்டேக்!

தனுஷின் 18 ஆண்டுகால சினிமா வாழ்வை குறிக்கும் வகையில் சிறப்பு ஹேஷ்டேக்!
தனுஷின் 18 ஆண்டுகால சினிமா வாழ்வை குறிக்கும் சிறப்பு ஹேஷ்டேக் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

நடிகர் தனுஷ் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராவார். செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான அவரது முதல் திரைப்படமான துள்ளுவதோ இளமையில் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். 

பெரிய வெற்றி பெற்ற இத்திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் செல்வராகவனின் இயக்கத்தில் நடித்த காதல் கொண்டேன் திரைப்படமும் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் மூலமாக, தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார். இதன் பிறகு வெளியான திருடா திருடி மற்றும் தேவதையைக் கண்டேன் போன்ற திரைப்படங்களின் மூலமாக தனது திரையுலக செல்வாக்கை நிலைநிறுத்திக் கொண்டார். 

இவர் ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப் இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

 2004-ஆம் ஆண்டில் தனுஷ், பிரபல தமிழ் நடிகர் ரஜனிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கம் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர்.

தனுஷ் ஒரு நடிகராக மட்டும்மில்லாது ஒரு பாடகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

இந்தநிலையில், தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை வெளியாகி மே 10ம் தேதியுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு ஆண்டும் தனுஷ் ரசிகர்களுக்கு இந்நாள் திருநாள் தான். அவரது 18 ஆண்டுகால திரை வாழ்க்கையை கொண்டாட காமென் டிபி ஒன்றை வெளியிட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷின் காமென் டிபியை, தயாரிப்பாளர் தாணு, இயக்குனர்கள் செல்வராகவன், பாலாஜி மோகன், துரை செந்தில்குமார், மாரி செல்வராஜ், கார்த்திக் நரேன், நடிகர் பிரசன்னா ஆகியோர் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாளை மே 9ம் தேதி மாலை 5 மணிக்கு அதனை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காமென் டிபியுடன், தனுஷின் 18 ஆண்டுகால சினிமா வாழ்வை குறிக்கும் சிறப்பு ஹேஷ்டேக் ஒன்றும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.