ரசிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: நலம் விசாரித்த சிம்பு?


ரசிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு: நலம் விசாரித்த சிம்பு?
x
தினத்தந்தி 8 May 2020 5:26 PM IST (Updated: 8 May 2020 6:04 PM IST)
t-max-icont-min-icon

ரசிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் தொலைபேசியில் நடிகர் சிம்பு நலம் விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில் படப்பிடிப்புகள் இல்லாத காரணத்தால்நடிகர், நடிகைகள் என அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். சமூக வலைதளத்தில் பலரும் கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். சமூக வலைதளத்தில் ஏற்பட்ட சர்ச்சையால் சிம்பு அனைத்திலுமிருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. 

லாக் டவுனால் 'மாநாடு' படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால், சிம்பு வீட்டிலேயே இருக்கிறார். இந்நிலையில், சிம்புவின் தீவிர ரசிகரான கடலூரைச் சேர்ந்த இளைஞர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதனை அறிந்த சிம்பு, உடனடியாக அவரிடம் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது. 'விரைவில் குணமாகி வீடு திரும்புவீர்கள், கவலை வேண்டாம். நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன்'' என்று ரசிகரிடம் சிம்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story