சினிமா செய்திகள்

வெப் தொடரில் நடிகர் தனுஷ்? + "||" + Actor Dhanush in web series?

வெப் தொடரில் நடிகர் தனுஷ்?

வெப் தொடரில் நடிகர் தனுஷ்?
தனுசும் வெப் தொடரில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

வெப் தொடர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதால் பிரபல நடிகர்-நடிகைகள் பலர் அதில் நடிக்கின்றனர். ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘குயின்’ வெப் தொடரில் ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் நடித்தனர். மீனா, பிரசன்னா, பரத், பாபி சிம்ஹா ஆகியோரும் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யா மேனன், பிரியாமணி, பிரியா பவானி சங்கர் ஆகியோரும் வெப் தொடர்களுக்கு மாறி உள்ளனர். சத்யராஜ், சீதா, சுகன்யா ஆகியோரும் தாமிரா இயக்கும் வெப் தொடரில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் தனுசும் வெப் தொடரில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வடசென்னை படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்திலும் நடிப்பேன் என்று தனுஷ் கூறியிருந்தார். இந்த வடசென்னை 2-ம் பாகத்தை 2 சீசன்களை கொண்ட வெப் தொடராக எடுக்கலாமா? என்று ஆலோசிப்பதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். இது வெப் தொடராக உருவானால் அதில் தனுசே நடிப்பார் என்று கூறப்படுகிறது.