சினிமா செய்திகள்

கமலின் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? பட நிறுவனம் விளக்கம் + "||" + Is Kamal's Indian-2 film dropped?

கமலின் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? பட நிறுவனம் விளக்கம்

கமலின் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? பட நிறுவனம் விளக்கம்
கமலின் இந்தியன்-2 படம் கைவிடப்பட்டதா? என பட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இருவேடங்களில் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய படம் இந்தியன். இதன் 2-ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இதில் காஜல் அகர்வால். பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பை ஆரம்பித்ததில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று படபிடிப்பை சில வாரங்கள் நிறுத்தினர். பின்னர் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தபோது கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்தது. ஓய்வு முடிந்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தியபோது கிரேன் விழுந்து படக்குழுவினர் 3 பேர் பலியான கோரவிபத்து நடந்தது. இதனால் படப்பிடிப்பு தடைபட்டது.

இந்த விபத்தை தொடர்ந்து கமல்ஹாசனும் பட நிறுவனமும் வெளியிட்ட அறிக்கைகளில் மோதல் வெளிப்பட்டதாக பரபரப்பானது. இப்போது கொரோனா ஊரடங்கினால் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியன்-2 படத்தை பட நிறுவனம் கைவிட திட்டமிட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை பட நிறுவனம் தரப்பில் மறுத்துள்ளனர். இந்தியன்-2 படத்தை கைவிடுவதாக வெளியான தகவல் வதந்தி என்றும், படத்தை பாதியில் நிறுத்தும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.