ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் பாடல் எழுதிய ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி
ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது படத்தில் பாடல் ஒன்றை ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குநர் ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் ‘தப்பு தண்டா' புகழ் சத்யமூர்த்தி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது'. ஹாரர்-காமெடி கலந்து உருவாகிவரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ‘பிக் பாஸ்' புகழ் யாஷிகா ஆனந்த், ‘எருமை சாணி' புகழ் ஹரிஜா, விஜயகுமார், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ‘மெட்ராஸ் சென்ட்ரல்' கோபி, சுதாகர், ஷாரா, அகஸ்டின் என யூ-டியூப் பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
இதனை நடிகர் சத்யமூர்த்தியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கிலாப் போர்டு புரொடக்ஷன்' மூலம் தயாரித்து வருகிறார். கௌசிக் கிரீஸ் இசையமைத்து வரும் இதற்கு ஜோஸ்வா ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 11-ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் பாடல் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' முதல் சிங்கிளாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இசையமைப்பாளரும் நடிகருமான ‘ஹிப் ஹாப் தமிழா' ஆதி இப்பாடலை எழுதி பாடியுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story