சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதில் எனக்கு மன நிறைவு - நடிகர் அருள்தாஸ் தகவல்
திரையுலகில் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதில் எனக்கு மன நிறைவு தருகிறது என நடிகர் அருள்தாஸ் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
கொரோனாவால் சினிமா தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. நடிகர்-நடிகைகள் வீடுகளில் முடங்கி உள்ளனர். பாதிப்பை ஈடுகட்ட நடிகர்-நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. மலையாள, தெலுங்கு நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் வற்புறுத்தி உள்ளனர். இதுபோல் தமிழ் நடிகர்களும் சம்பளத்தை குறைக்க வற்புறுத்தப்பட்டது. அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி தனது புதிய படங்களுக்கான சம்பளத்தில் ரூ.3 கோடியை குறைப்பதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து இளம் கதாநாயகன் ஹரிஷ் கல்யாணும் சம்பளத்தை குறைத்துள்ளார். இதுபோல் பிரபல டைரக்டர் ஹரியும் சம்பளத்தில் 25 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்து உள்ளார்.
இந்நிலையில், பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ்,
பிரபல ஒளிப்பதிவாளரும், நடிகருமான அருள்தாஸ், 2020 ஆண்டில் என்னுடைய நடிப்பிற்கு சம்பளம் வேண்டாம்.
எனக்கு வாய்ப்புக் கொடுப்பது இயக்குநர்கள் என்றாலும் கூட எனக்கு சம்பளம் கொடுப்பது தயாரிப்பாளர்கள் எனும் முதலாளிகள் தான். மேலும் தான் பலகோடிகள் வாங்கும் நடிகன் இல்லை என்றாலும் எனக்கும் தேவைகள் உள்ளது. ஆனால் என்னிடம் உள்ள பொருளாதாரத்தைக் கொண்டும் சில நண்பர்களிடம் உதவிகள் கேட்டும் என்னால் சில மாதங்கள் சமாளிக்க முடியும். அதனால் திரையுலகில் முதலாளிகளுக்கு கைம்மாறாக என் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதில் எனக்கு மன நிறைவையே தருகிறது என்று அவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காலா, தங்கமீன்கள், பேரன்பு உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர், ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story