சினிமா செய்திகள்

கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்துக்கொண்ட உதயா, ஆர்த்தி + "||" + Udaya, Aarthi, who had reduced salary

கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்துக்கொண்ட உதயா, ஆர்த்தி

கொரோனா பாதிப்பு: சம்பளத்தை குறைத்துக்கொண்ட உதயா, ஆர்த்தி
கொரோனா பாதிப்பு காரணமாக தனது சம்பளத்தை உதயா, ஆர்த்தி குறைத்துக்கொண்டனர்.
சென்னை,

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தயாரிப்பாளர்களுக்கு உதவ நடிகர்கள் விஜய் ஆண்டனி, அருள்தாஸ், ஹரிஷ் கல்யாண், இயக்குனர் ஹரி ஆகியோர் சம்பளத்தை குறைத்துள்ளனர். இந்தநிலையில் நடிகர் உதயா, நடிகை ஆர்த்தி ஆகியோரும் சம்பளத்தை குறைப்பதாக அறிவித்துள்ளனர்.

நடிகர் உதயா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனாவால் திரையுலகம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் திரையுலகம் நன்றாக இருக்கும். எனவே நான் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் அக்னி நட்சத்திரம், மாநாடு படங்களில் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் இருந்து 40 சதவீதம் சம்பளத்தை குறைத்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் நடிகை ஆர்த்தி வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கடினமான கொரோனா காலத்தை கடந்து வந்து கொண்டு இருக்கிறோம். ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு சினிமாவே வாழ்வாதாரம். நடிகர்கள் பலர் சம்பளத்தை 25 சதவீதம் முதல் 40 சதவீதம்வரை குறைத்துள்ளனர். அடுத்த ஒரு வருடத்துக்கு நான் நடிக்கப்போகும் ஒவ்வொரு படத்தில் இருந்தும் என் சம்பளமாக வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வாங்க இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் நமது முதலாளிகள். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும்’ என்று பேசி உள்ளார்.