சினிமா செய்திகள்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை சித்தாரா விளக்கம் + "||" + Why not get married? Description of Actress cithara

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை சித்தாரா விளக்கம்

திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை சித்தாரா விளக்கம்
திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? நடிகை சித்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,

பாலசந்தர் இயக்கிய ‘புதுபுது அர்த்தங்கள்’ படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் சித்தாரா. விக்ரமன் இயக்கத்தில் முரளி ஜோடியாக நடித்த புது வசந்தம் படமும் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. ரஜினிகாந்துடன் படையப்பா மற்றும் புரியாத புதிர், நட்புக்காக, சின்னதுரை, மனுநீதி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். தற்போது அம்மா, அண்ணி வேடங்களில் நடித்து வருகிறார். சித்தாராவுக்கு 47 வயது ஆகிறது. ஆனாலும் இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? என்று சித்தாராவிடம் கேள்வி எழுப்பியபோது அவர் அளித்த பதில் வருமாறு:-

‘திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற முடிவில் நான் இருக்கிறேன். இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. எனது தந்தையை என்னால் மறக்கவே முடியாது. எனது வாழ்க்கையில் அவர் முக்கியமான நபராக இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் இறந்துபோனார். அந்த இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. அவர் மறைவுக்கு பிறகு திருமணத்தை பற்றியே நான் சிந்திக்கவில்லை. இப்போது மணமகன் கிடைத்தால் திருமணம் செய்து கொள்வீர்களா? என்று கேட்கின்றனர். திருமணம் பற்றிய சிந்தனையே எனக்கு இல்லை’.

இவ்வாறு சித்தாரா கூறினார்.