கொரோனா வைரஸ் ஆபத்து: குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்த சன்னி லியோன்


கொரோனா வைரஸ் ஆபத்து: குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்த சன்னி லியோன்
x
தினத்தந்தி 11 May 2020 4:00 PM IST (Updated: 11 May 2020 4:00 PM IST)
t-max-icont-min-icon

சன்னி லியோன் குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு பறந்துள்ளார், அங்கு கண்ணுக்கு தெரியாத கொலையாளி கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாப்பாக இருப்போம் என்று நாங்கள் உணர்கிறோம் என்று கூறி உள்ளார்.

மும்பை

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தாங்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று உணர்ந்ததால்" சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபர் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகளுடன் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளார். மகள் நிஷா, மற்றும் மகன்கள் நோவா மற்றும் ஆஷர் தோட்டத்தில் ஒரு படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் மகிழ்ச்சியான படத்தை சன்னிலியோன் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்காவிற்கு செல்ல  அவர்கள் எடுத்த முடிவு குறித்து அவர் கூரியதாவது:-

 அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். வாழ்க்கையில் நீங்கள் குழந்தைகளைப் பெறும்போது உங்கள் சொந்த முன்னுரிமைகள் மற்றும் நல்வாழ்வு பின் தள்ளப்படும்.  நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளை இந்த கண்ணுக்கு தெரியாத கொலையாளி “கொரோனா வைரஸ்” க்கு எதிராக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என உணர்ந்தோம். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள  ரகசிய தோட்டத்திலிருக்கும் எங்கள் வீடு. இதுதான். என் அம்மா எனக்கு என்ன செய்ய விரும்பியிருப்பார் என்று எனக்குத் தெரியும். மிஸ் யூ அம்மா. மகிழ்ச்சியான தாய்மார்கள் தினம்!" என கூறி உள்ளார்.

இதனை சன்னி லியோன் கணவர்  டேனியல் வெபர் உறுதிபடுத்தி உள்ளார்.




Next Story