நடிகை நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாய் பரவி வருகிறது.
மும்பை,
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை நிதி அகர்வால். நடிகை நிதி அகர்வால் திரைப் பட நடிகை மட்டும் இல்லாமல் டான்சர், மாடலும் ஆவார். இவர் இந்தியில் முன்னா மைக்கேல் என்ற படத்தின் மூலம் தான்
சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின்னர் இவர் தெலுங்கு மொழியில் சவ்யாசாச்சி மிஸ்டர் மஞ்சு ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.
ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மணன், அடுத்து இயக்கும் படம், 'பூமி'. இதில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது அவருக்கு 25-வது படம் ஆகும். இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார்.
இந்தநிலையில், நடிகை நிதி அகர்வால் தமிழ் மொழியை கற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவர் எப்படி தமிழ் மொழியை கற்கிறார் என்ற போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் நிதி அகர்வால் செய்திருக்கிறார். புதிய மொழி கற்றுக் கொள்கிறேன் என்ன மொழி என்று கண்டுபிடியுங்கள் என கூறியுள்ளார்.
அதில் ஒவ்வொரு இங்கிலிஷ் வார்த்தைக்கும் தமிழின் அர்த்தத்தை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதாவது தங்கிலிஷில் எழுதி படித்து வருகிறார்.