சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ்! + "||" + AnnaatthePongal2021 sunpictures

ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ்!

ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ்!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ' அண்ணாத்த' 2021-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,

தர்பார் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் ' அண்ணாத்த' என்று பெயரிடப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகைகள் குஷ்பு , மீனா , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா உள்ளிட்டோர்  நடிக்கின்றனர். 
 
ரஜினிகாந்துக்கு ஜோடியாக குஷ்பு, மீனா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். நயன்தாரா வக்கீலாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்தின் மகளாக கீர்த்தி சுரேஷ் வருகிறாராம். சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். ரஜினிகாந்த்ற்கு இது 168-வது படம் ஆகும். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். 

இரண்டு கட்டப் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்,  மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், அண்ணாத்த படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு பொங்கலில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படமும், 2020-ம் ஆண்டு பொங்கலில் ரஜினி நடித்த தர்பார் படமும் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு; ரஜினி, நயன்தாரா நடித்த காட்சிகள் படமானது
கொரோனா ஊரடங்கை தளர்த்தியதும் ஐதராபாத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பை கடந்த டிசம்பர் மாதம் தொடங்கியபோது படக்குழுவை சேர்ந்த 4 பேர் கொரோனா தொற்றில் சிக்கியதால் படப்பிடிப்பை நிறுத்தினர்.
2. “அண்ணாத்த” படப்பிடிப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் - நடிகர் ரஜினிகாந்த்
ஹைதராபாத்தில் நடைபெறும் அண்ணாத்த படப்பிடிப்பு வரும் ஜனவரி 10ம் தேதிக்குள் நிறைவடையும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.