சினிமா செய்திகள்

கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் - பிரியாமணி + "||" + The Family Man fame actress Priyamani is in no rush to work with Hindi filmmakers

கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் - பிரியாமணி

கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் - பிரியாமணி
கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் என்று நடிகை பிரியாமணி கூறியுள்ளார்.
சென்னை,

பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், பிரியாமணி. தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய டைரக்டர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். தமிழில் கண்களால் கைது செய், அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் படங்களில் நடித்தது போல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் பிரியாமணி நடித்து இருந்தார்.

புகழ் பெற்ற தென்னிந்திய கதாநாயகியாக இருந்தபோதே முஸ்தபாராஜ் என்ற தொழில் அதிபரை, இவர் திருமணம் செய்து கொண்டார்.  வெள்ளித்திரையில் நடிப்பு திறமையை காட்டிய பிரியாமணி, 

‘தி பேமிலிமேன்’ என்ற வெப் தொடரில் நடித்து, டிஜிட்டல் தள ரசிகர்களிடம் இருந்து அதிக பாராட்டை பெற்றார். தற்போது ‘அதீத்’ என்ற இன்னொரு வெப் தொடரிலும் நடிக்கிறார். இதில் ராணுவ அதிகாரியின் மனைவியாக வருகிறார். தற்போது வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

அஜய் தேவ்கான் ஜோடியாக ‘மைதான்’ படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கில் வெங்கடேஷ், ராணா ஆகியோர் படங்களிலும் நடித்து வருகிறார். 

இந்தநிலையில்,  ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நடிகை பிரியாமணி கூறியதாவது:-

என்னால் ஒரு படத்தின் கதாபாத்திரத்துக்குப் பொருந்த முடியும் என இந்தி இயக்குநர்கள் எண்ணினால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வேன். இந்திப் படங்களில் நடிப்பதன் மூலம் என் எல்லையை விரிவுபடுத்த எப்போதும் தயாராக உள்ளேன். இணையத் தொடர்களோ படமோ கிடைத்த வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்தி சாதிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.