சினிமா செய்திகள்

பெண் தொழில் அதிபரை மணக்கிறார் நடிகர் ராணாவுக்கு திருமணம் முடிவானது + "||" + The marriage to actor Rana has ended

பெண் தொழில் அதிபரை மணக்கிறார் நடிகர் ராணாவுக்கு திருமணம் முடிவானது

பெண் தொழில் அதிபரை மணக்கிறார் நடிகர் ராணாவுக்கு திருமணம் முடிவானது
நடிகர் ராணாவுக்கு திருமணம் முடிவானது,பெண் தொழில் அதிபரை மணக்கிறார்.
சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் ராணா. இவர் 2010-ல் லீடர் என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்தார். தமிழில் அஜித்துடன் ‘ஆரம்பம்’ படத்தில் நடித்துள்ளார். பாகுபலி படத்தில் பல்வால் தேவனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தியில் தயாராகும் காடன் படத்தில் நடித்து வருகிறார். ராணாவும், திரிஷாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. அதனை இருவரும் மறுத்தார்கள்.

தற்போது ராணாவுக்கு 35 வயது ஆகிறது. அவரது திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த நிலையில் தனக்கு மிஹீகா பஜாஜ் என்ற பெண்ணுடன் திருமணம் முடிவாகிவிட்டதாக சமூக வலைத்தளத்தில் ராணா அறிவித்து உள்ளார். மணப்பெண் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். தான் காதலிக்கும் பெண் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டதாகவும் கூறியுள்ளார். மிஹீகா பஜாஜ் ஐதராபாத்தை சேர்ந்தவர். இவர் சொந்தமாக நிகழ்ச்சி மேலாண்மை, ஆடை, பர்ஸ், கைப்பை வடிவமைப்பு நிறுவனம் நடத்துகிறார். மாடலிங் தொழிலும் செய்கிறார். ராணாவுக்கு நடிகர்கள் ஆர்யா, பிரபாஸ், சிரஞ்சீவி, சுருதிஹாசன், தமன்னா உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.