சினிமா செய்திகள்

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - கமல்ஹாசன் + "||" + The time has come for people to become justice Kamal Hassan

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - கமல்ஹாசன்

இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது - கமல்ஹாசன்
அரசுக்கு தீர்ப்பு வழங்க, இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை,

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. பின்னர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. துகுறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்த நிலையில்,

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் ஓரிரு நாட்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் பாதுகாப்புடன் திறக்கப்படும் எனத் தெரிக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மது பிரியர்கள் கடைகள் திறக்கப்படுவது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,

மக்கள் நலனில் என்றுமில்லாத உத்வேகத்தை மதுக்கடை திறப்பில் காட்டுகிறது தமிழக அரசு. ஐகோர்ட்டில் பதிலளிக்க அவகாசம் கேட்டுவிட்டு உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிவிட்டது. தமிழக அரசுக்கு தீர்ப்பு வழங்க இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் - கமல்ஹாசன் புகழாரம்
பகுத்தறிவையும் சமூக நீதியையும் கொண்டு தமிழகத்தின் சிந்தனைப் பாதையை சீர்திருத்தியவர் பெரியார் என்று கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.
2. "எவனென்று நினைத்தாய்" கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்
கமல்ஹாசன் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. படத்திற்கு "எவனென்று நினைத்தாய்" என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
3. “புதிய அரசியல் சமைப்போம்.வான்புகழ் தமிழகம் காண்போம்” - கமல்ஹாசன் டுவீட்
பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி 'பாரதியின் அக்கினிக் குஞ்சுகளாய் மாறி புதிய அரசியல் சமைப்போம்' என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.
4. நம் பிள்ளைகளுக்கு நற்கல்வி தந்து சான்றோர்களாக உருவாக்குவது நல் ஆசிரியர்கள்தான்: கமல்ஹாசன் டுவிட்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. ஓபிசி இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - கமல்ஹாசன்
ஓபிசி இட ஒதுக்கீட்டில் உயர்நீதி மன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.