சினிமா செய்திகள்

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து பிரியா வாரியர் விலகல்? + "||" + Priya Varrier deactivates her Instagram account,

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து பிரியா வாரியர் விலகல்?

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து பிரியா வாரியர் விலகல்?
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருந்து பிரியா வாரியர் விலகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.
புதுடெல்லி,

ஒரு அடார் லவ்' மலையாள படத்தின் 'மாணிக்ய மலராய பூவி' பாடல் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது. அந்தப் பாடலில் இடம்பெற்றிருக்கும் பிரியா பிரகாஷ் வாரியர் ட்ரெண்டாகியது.

இதில் நடித்த பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் வீடியோ வெளியான சில நாட்களிலேயே சமூக வலைதளங்களில் எண்ணிக்கை லட்சங்களை எட்டியது. மலர் டீச்சர், ஜிமிக்கி கம்மல் ஷெரிலை அடுத்து ட்ரெண்டாகி வந்த பிரியா வாரியர் செய்யும் கண் மற்றும் புருவ அசைவுகள் இளைஞர்களையும், இளம் பெண்களையும் கட்டிப்போட்டது. 

 'மாணிக்ய மலராய பூவி' பாடலில் பிரியா பிரகாஷ் வாரியரின் புருவம் உயர்த்தும் கண் அடிக்கும் காட்சி சமூக வளைத்ததில் மிகவும் வைரலானது. இவருக்கு தமிழ், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உண்டு. அவருக்கு தற்போது இன்ஸ்டாகிராமில் சுமார் 7 மிலியனுக்கும் அதிகமாக அதாவது 70 லட்சத்துக்கும் அதிகமான பாலோயர்கள் குவிந்தனர் கோலிவுட் மட்டுமல்ல சில ஹாலிவுட் ஸ்டார்களின் பாலோவர்களையும் மிஞ்சி விட்டார் எனலாம். 

இந்நிலையில் திடீரென்று பிரியா வாரியார் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து விலகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது.  அதற்கான காரணம் பற்றி அவர் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.  அதே சமயம் மற்ற இணைய தள கணக்குகளில் தொடர்ந்து நீடிக்கிறார். லட்சம் கணக்கான பாலோவர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கும் பிரியா வாரியர் மீது யார் கண்ணு பட்டுச்சோ இன்ஸ்டாவிருந்து விலகி விட்டாரே, என ரசிகர்கள் தங்கள்ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.