பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள் - அருண்விஜய் வேண்டுகோள்


பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல் உடற்பயிற்சி செய்யாதீர்கள் - அருண்விஜய் வேண்டுகோள்
x
தினத்தந்தி 16 May 2020 2:25 PM IST (Updated: 16 May 2020 2:25 PM IST)
t-max-icont-min-icon

பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல் எப்போதும் உடற்பயிற்சி செய்யாதீர்கள் என நடிகர் அருண்விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை,

‘முறை மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமான அருண் விஜய், இதுவரை 29 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 30-வது படம், ‘சினம்.’ இதில் அவருக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடித்து இருக்கிறார். ஜி.என்.ஆர்.குமரவேல் இயக்கியிருக்கிறார். 

கொரோனா ஊரடங்கால் படபிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டின் மொட்டைமாடி மற்றும் அறையில் செய்யும் உடற்பயிற்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் அருண் விஜய் வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு உடற்பயிற்சி செய்யும்போது, தனக்கு ஏற்பட்ட காயம் தொடர்பான பதிவொன்றை வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

அருண்விஜய் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இதை எப்போதும் செய்யாதீர்கள். உடற்பயிற்சிக்கு முன்பாக உங்கள் இயந்திரங்களைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இது விழுந்ததால் என்னுடைய இரண்டு முட்டிகளும் ஒரு வாரம் முழுக்க வீங்கியிருந்தன. என் தலையில் அடிபடாமல் இருந்ததற்குக் கடவுளுக்கு நன்றி. இதுவொரு பாடம். பயிற்சியாளரின் மேற்பார்வை இல்லாமல் எப்போதும் உடற்பயிற்சி செய்யாதீர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Next Story