சினிமா செய்திகள்

விவாகரத்து கேட்டு நவாசுதீன் சித்திக்குக்கு மனைவி நோட்டீசு + "||" + Nawazuddin Siddique's wife notices for divorce

விவாகரத்து கேட்டு நவாசுதீன் சித்திக்குக்கு மனைவி நோட்டீசு

விவாகரத்து கேட்டு நவாசுதீன் சித்திக்குக்கு மனைவி நோட்டீசு
விவாகரத்து கேட்டு நவாசுதீன் சித்திக்குக்கு, அவரது மனைவி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

ரஜினிகாந்துடன் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக். இவரை மும்பையில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு சென்றதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திய தகவல் வெளியானது.

இந்த நிலையில் நவாசுதீன் சித்திக்கை அவரது மனைவி ஆலியா விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ள தகவல் தற்போது வெளியாகி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நவாசுதீன் சித்திக்கும், ஆலியாவும் 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்குள் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இந்தி நடிகர்களும் குடும்பத்தினரும் சமரசம் பேசி இவர்களை சேர்த்து வைத்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். விவாகரத்துக்கான நோட்டீசை நவாசுதீன் சித்திக்கு அனுப்பி விட்டதாகவும், ஆனால் அவர் பதில் அனுப்பவில்லை என்றும் ஆலியாவின் வழக்கறிஞர் கூறினார்.

ஆலியா கூறும்போது, ‘நான் விவாகரத்து கேட்டு இருப்பது உண்மைதான். விவாகரத்துக்கான காரணம் ஒன்றல்ல. நிறைய இருக்கின்றன. அனைத்து காரணங்களுமே வலுவானவை’ என்றார்.

நவாசுதீன் சித்திக்கிடம் கேட்டபோது சொந்த வாழ்க்கை பற்றி பேச விரும்பவில்லை என்றார். இந்த விவாகரத்து விவகாரம் இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.