இந்தியாவுக்கு ஜாக்கி சான் மூலம் சமாதான செய்தி வழங்கும் சீனா + "||" + Jackie Chan’s message of peace to India amid coronavirus pandemic is China's charm offensive
இந்தியாவுக்கு ஜாக்கி சான் மூலம் சமாதான செய்தி வழங்கும் சீனா
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் இந்தியாவுக்கு ஜாக்கி சான் மூலம் சமாதான செய்தி சீனா வழங்கி உள்ளது.
புதுடெல்லி
கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவது தொடர்பாக அதிகரித்து வரும் உலகளாவிய பின்னடைவை எதிர்கொண்டுள்ள சீனா, அதன் செல்வாக்கை சரிசெய்ய ஒரு கவர்ச்சியான திட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது.
உலகம் முழுவதும் புகழ் பெற்ற நடிகர் ஜாக்கி சான். இவருக்கு இந்தியாவில் கோடிகணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஜாக்கி சான் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்களுக்கு அமைதி மற்றும் அன்பின் செய்தியை வழங்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இந்தியாவின் சீன தூதர் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவின் சீன தூதர் சன் வீடோங் செவ்வாயன்று ஜாக்கி சானின் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து அதில் அவர் இந்தியர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக வாழ்த்தி உள்ளார்.
நடிகர் விஜயின் ‘மாஸ்டர்’ பட காட்சிகள் கசிந்த விவகாரத்தில் டிஜிட்டல் நிறுவனத்திடம் படத்தின் தயாரிப்பாளர் ரூ. 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.