திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்


திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 22 May 2020 3:53 AM IST (Updated: 22 May 2020 3:53 AM IST)
t-max-icont-min-icon

திரைக்கு வருவது எப்போது? ரஜினி, விஜய், அஜித், சூர்யா படங்கள் பற்றி சிறப்பு தகவல்கள்

கொரோனா ஊரடங்கை தொடர்ந்து சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு வாபஸ் பெறப்பட்ட பின், அடுத்த மாதம் (ஜூன்) தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். இதனால் தியேட்டர்களில் வசூல் குறையும்.

இந்த சூழ்நிலையில், மிகப்பெரிய கதாநாயகர்கள் 4 பேர் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் வரிசையாக திரைக்கு வர உள்ளன. அந்த படங்கள் வருமாறு:-

1. ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’. இதில் ரஜினிகாந்த் ஜோடிகளாக நயன்தாரா, குஷ்பு, மீனா ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். சிவா டைரக்டு செய்கிறார். படத்தில் இடம்பெறும் சில காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு இருந்தார்கள். அதற்குள் கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினை வந்து விட்டதால், வெளிநாட்டுக்கு பதில் மாற்று இடத்தை தேர்வு செய்து படப்பிடிப்பை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.

2. விஜய் நடித்த ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்துள்ளார்.

3. அஜித்குமார் நடித்து வரும் ‘வலிமை’. இதில் அஜித்குமார் ஜோடியாக ஹூமாகுரோசி நடித்து வருகிறார். வினோத் டைரக்டு செய்து வருகிறார்.

4. சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’. இந்தப் படத்தில் சூர்யா ஜோடி, அபர்ணா பாலமுரளி. டைரக்டர், சுதா கொங்கரா.

இதில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’, ‘சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ ஆகிய 2 படங்களின் அனைத்து பணிகளும் முடிவடைந்து, திரைக்கு வரத் தயாராக உள்ளன. ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ படமும், அஜித்குமாரின் ‘வலிமை’ படமும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளன.

4 படங்களையும் வெற்றி பெறவைத்து, தங்கள் ‘ஹீரோ’க்களை வசூல் ராஜாக்களாக தூக்கிப் பிடிப்பது ரசிகர்கள் கையில் இருக்கிறது.


Next Story